ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகை நமீதா தற்போது நமீதா தியேட்டர்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் பாவ் பாவ் என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்துள்ளார். அவரே ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இதை தொடர்ந்து படம் வெற்றி பெறவும், தொடர்ந்து படம் தயாரிக்கவும், நடிக்கவும், புதிதாக தொடங்கி உள்ள ஓடிடி தளம் வெற்றி பெறவும் வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரியும் உடன் சென்றார்.
இருவரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அத்துடன் கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனம் முடிந்து வெளியில் வந்த நமீதா நிருபர்களிடம் கூறும்போது "ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக இருந்தது. நான் நடித்த பாவ் பாவ் படம் படப்பிடிப்பு முடிந்து திரையிட தயாராகி வருகிறது. நமீதா தியேட்டா்ஸ் என்ற பெயரில் புதிய ஓடிடி செயலி, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன்" என்றார்.