தமிழ்நாட்டில் ஒரு நமீதா இருப்பது போன்று மலையாளத்தில் இருப்பவர் நமீதா புரமோத். தமிழ்நாட்டு நமீதா கவர்ச்சியால் பிரபலம். மலையாள நமீதா நடிப்பால் பிரபலம். மலையாள படங்களில் பிசியாக நடித்து வரும் நமீதா புரமோத் கையில் இப்போதும் 5 மலையாள படங்கள் இருக்கின்றன. தமிழில் கடைசியாக 'நிமிர்' படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக 'அவள் பெயர் ரஜ்னி' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது.
நமீதா புரமோத் கூறும்போது “என்னோட முதல் பைலிங்குவல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியாவது மகிழ்ச்சி. காளிதாஸ் மிகச்சிறந்த கோ ஸ்டார். நடிப்பின் போது நிறைய உதவிகள் செய்தார். இயக்குநர் திறமையானவர் நன்றாக இயக்கியுள்ளார். இது நல்லதொரு திரில்லர் அனுபவம் தரும். படத்திற்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.