‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
விஜயகாந்த்த நடித்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம்தான் நமீதா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். தனது கணவருடன் இணைந்து படத் தயாரிப்பில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
நமீதா நேற்று தன்னுடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்தார். பின்பு மாலையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “என் பிறந்தநாளையொட்டி கோயிலில் அன்னதானம், பூஜை செய்தேன். எனக்கு மகிழ்ச்சி. கேப்டன் (விஜயகாந்த்) மறைந்த சமயத்தில் என்னால் இங்கு வர முடியவில்லை. இன்று என் பிறந்தநாளின்போது கேப்டனின் ஆசீர்வாதம் வேண்டும் என்று இங்கு வந்திருக்கிறேன். நான் கடவுளாக கருதும் அவர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்துவது என்னுடைய பாக்கியம். தமிழ்நாட்டில் நமீதாவுக்கு உயிர் கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் தான். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது மகிழ்ச்சி.” என்றார்.