அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர் சிவகுமார் பாணியில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளை விஜய் கவுரவிக்க முடிவு செய்தார். கடந்த ஆண்டு 1500 மாணவர்களை அழைத்து கவுரவித்து, அவர்களுக்கு விருந்தளித்தார். அதேபோன்று இந்த ஆண்டும் செய்ய இருக்கிறார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் “தமிழ்நாடு, புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.