2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி, 45. இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்துகிறார். இவர் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில், மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின், 'ஆல் இந்தியா தலைவர்' எனக் கூறினார். அந்த அமைப்பின் தமிழக கவுன்சில் சேர்மன் பதவி வாங்கி தருவதாக கூறி 3.50 கோடி ரூபாய் கேட்டார்.
நான் முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்ற அவர், பதவியை பெற்றுத் தரவில்லை. கேட்டபோது நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியிடம் 4 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு அவருக்கு பதவியை கொடுத்து விட்டதாக கூறினார். என் பணத்தை திரும்ப கேட்டபோது, 9 லட்சத்தை கொடுத்துவிட்டு, மீதி, 41 லட்சத்தை, ஒரு மாதத்தில் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். பணத்தை பெற்றுக் கொடுப்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து நடிகை நமீதா, அவரது கணவர் சவுத்ரி, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம், சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். முத்துராமன், துஷ்யந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் மத்திய அரசின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதும், மோசடி செய்த பணத்தில் சொத்து வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதுபற்றி மேலும் விசாரிக்க, நமீதாவின் கணவர் சவுத்ரி, பா.ஜ., நிர்வாகி மஞ்சுநாத் ஆகியோருக்கு சேலம் மாநகர போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.