2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சன்னி லியோன் யார் என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. இதுவரையில் தனது கிளாமர் மற்றும் கவர்ச்சிப் புகைப்படங்களை மட்டுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிட்டு வந்த சன்னி லியோன் நேற்று வித்தியாசமாக சமூக அக்கறையுடன் ஒரு பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்துத்தான் சன்னி லியோன் பதிவு அமைந்துள்ளது.
சைக்கிளுடன் நிற்கும் தனது புகைப்படங்களைப் பதிவிட்டு, “கடைசியாக 100 ரூபாயைக் கடந்துவிட்டது. உங்கள் உடல்நலனில் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். சைக்கிளிங் தான் புதிய கிளாமர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சன்னி லியோனின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் இனி சைக்கிளில் சென்றால் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய கவலையும் இருக்காது, உடல்நலனுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.