தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன.
ஆனாலும், அவர் நடிக்க வேண்டிய இன்னும் சில காட்சிகள் படமாக்க வேண்டியுள்ளதாம். அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக ரஜினிகாந்த் செல்ல வேண்டி இருந்ததால் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்களாம்.
கோல்கட்டா நகரப் பின்னணியில் படமாக வேண்டிய அந்தக் காட்சிகளை கோல்கட்டா சென்று படமாக்கலாமா அல்லது ரஜினிகாந்த் வசதிக்காக கோல்கட்டாவை சென்னையிலேயே 'செட்' செய்துவிடலாமா என படக்குழு யோசித்து வருகிறதாம். ரஜினிகாந்த் என்ன சொல்கிறாரோ அதன்படி படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள். அந்தக் காட்சிகளை படமாக்கி முடித்த பின் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.