பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் |
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் இந்த வாரம் வெளியாகிறது. இதற்குமுன்பு இந்த இயக்குனர் இயக்கிய ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். இவர் தயாரித்த லாபம் படத்திலும் நடித்து இருக்கிறார். இது 3வது முறையாக கூட்டணி.
சென்னையில் நடந்த இந்த படவிழாவில் ஆறுமுககுமார் குறித்து ஒரு விஷயத்தை விஜய்சேதுபதி பேசினார். வர்ணம் (2011) என்ற படத்தில் சின்ன வேடத்தில் நடித்தேன். அப்போது நம் பார்வை யார் மீதாவது படாதா? நமக்கு வாய்ப்பு கிடைக்காதா என்ற நிலையில் இருந்தேன். அப்போது அந்த பட இணை இயக்குனராக இருந்த ஆறுமுககுமார் எனக்காக பேசி அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். அந்த சமயத்தில் நான் என்ன ஆகப்போகிறேன் என்ற கவலையில் என் தந்தை இருந்தார். உடல்நலக்குறைவாலும் அவதிப்பட்டு இருந்தார். அந்த காலத்தில் வர்ணம் படத்தில் நான் நடித்த போட்டோவை அவரிடம் காண்பித்தேன். அவர் ஆறுதல் அடைந்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணேம் படத்திலும் நான் நடிக்க இவர்தான் காரணமாக இருந்தார்.
மெய்யழகன் படத்தில் தங்கள் சைக்கிளை கார்த்தி குடும்பத்துக்கு கொடுத்து செல்லும் அரவிந்த்சாமி குடும்பம். பிற்காலத்தில் அந்த சைக்கிளால் கார்த்தி குடும்பம் முன்னேறும், அந்த பாசத்தில்தான் அரவிந்த்சாமியை கொண்டாடுவார் கார்த்தி. ஆனால், அரவிந்த்சாமி குடும்பத்துக்கு அந்த சைக்கிளால் அந்த அளவுக்கு மாற்றம் நடக்கும் என்று தெரியாது. அந்த மாதிரிதான். அன்று எனக்காக பரிந்து பேசி ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் இயக்குனர் ஆறுமுககுமார். அவர் கைமாறு எதிர்பார்க்கவில்லை. நான் பெரிய ஹீரோவாக வருவேன் என எதிர்பார்த்து உதவி செய்யவில்லை. நான் கார்த்தி குடும்பம் மாதிரியான நிலையில் இருந்தேன். கடவுள் கொடுத்த வாய்ப்பாக, அவர் அனுப்பிய நபராக வர்ணம் பட வாய்ப்பை நினைத்தேன். என்னை பலர் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. என்னை இன்னும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறேன்'' என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.