சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
குட் பேட் அக்லியில் சில இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சை ஆனது. வழக்கம்போல் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது இளையராஜா தரப்பு. இந்நிலையில், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளரும், இளையராஜா சகோதரருமான கங்கை அமரன், ‛‛குட் பேட் அக்லி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை கடுமையாக விமர்சனம் செய்தார். 7 கோடி சம்பளம் வாங்குபவர், இளையராஜா பாடல்களை பயன்படுத்தியது ஏன் என்று திட்டினார். அவரது பேச்சு பரபரப்பானது. ஆனால், இதுவரை அதற்கு ஜி.வி.பிரகாஷ் பதில் சொல்லவில்லை.
இந்நிலையில், சென்னையில் நடந்த, பெண் இயக்குனர் மேக்னா இயக்கிய லக்கிநன் பட பாடல் வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் வல்லவன் பட தயாரிப்பாளரும், நடிகருமான தேனப்பன். அவர் பேசுகையில் '' அந்த விழாவில் கங்கை அமரன் அப்படி பேசி இருக்க கூடாது. அந்த படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தியது குறித்து தயாரிப்பாளர், இயக்குனரிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். இளையராஜா இசையமைத்த பிதாமகன் படத்தில் எம்.எஸ்.வி இசையமைத்த தகதகவென ஆடி வா பாடல் இடம் பெற்றது. அதற்கு இளையராஜா பொறுப்பா? இயக்குனர் பாலா தானே அந்த பாடல் வைத்தார். இளையராஜாவுக்கு பாடல் உருவாக்க தெரியவில்லை என அர்த்தமா? ஜி.வி.பிரகாஷ் மீது அவருக்கு அப்படி என்ன கோபமோ? அவர் தனது சம்பளத்தை பல படங்களுக்கு விட்டுக்கொடுத்தார்.
சமீபத்தில் கூட ஒரு படத்துக்கு தனது 60 லட்சம் சம்பளத்தை விட்டுக்கொடுத்து, அந்த படம் வெளியிட உதவினார். என பொங்கினார். அதே விழாவில் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், குட்பேட் அக்லி பாடல் சர்ச்சை தொடர்பாக, ஜி.வி.பிரகாஷ் மீது வழக்கு போட வேண்டும் என்று பேசிய கங்கை அமரன் மீதுதான் முதல்ல வழக்கு போட வேண்டும் என்று இளையராஜா, அவர்கள் குடும்பத்தினரே பேசியதாக தகவல் என்று தனது பாணியில் கிண்டல் அடித்தார்.