பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க.பெ.ரணசிங்கம் ஓடிடியில் வெளியானது. தற்போது அவர் தி கிரேட் இண்டியன் கிச்சன் என்ற மலையாள படத்தின் ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இந்த படம் ஓடிடி வெளியீட்டுக்கென்றே தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துள்ள திட்டம் இரண்டு படமும் ஓடிடியில் வெளியாகிறது. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. சதீஷ் ரகுநாதன இசை அமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கொரோனா 3வது அலை வீசாவிட்டால் தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்கள் திறக்கப்படாலாம். 3வது அலை வந்தால் எப்போது திறக்கப்படும் என்றே தெரியாத நிலை. இதனால் திட்டம் இரண்டு படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.




