100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் தனக்கு எதிராக செயல்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : 'ரசிகர்களிடம் பணத்தை பெற்று கொண்டு என்னைப்பற்றிய பர்சனல் விவரங்களை கூறுவது போன்ற செயல்களை என்னுடன் இருந்து கொண்டே, எனக்கு மிகவும் நம்பிக்கையான நபரே இதுமாதிரி செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது புகார் அளிக்க பலர் கூறினார்கள். என்றாலும் தப்பு நடந்து விட்டது. இனிமேல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன். என்னை போல மற்றவர்களுக்கு எதுவும் இதுபோன்று நேரக்கூடாது என்பதற்காக இதனை நான் சொல்கிறேன். எனவே யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது? என்றே எனக்கு புரியவில்லை' என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.