இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். பிற்காலத்தில் கொலை வழக்கில் சிறைக்கு சென்று, சொந்த படம் தயாரித்து பணத்தை இழந்து மறைந்தார். அவரது சமாதி திருச்சியில் உள்ளது. அவரது குடும்பத்தினரும் திருச்சியில் வாழ்ந்து வருகிறார்கள்.
தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம் என்பவர் முதல்வரின் தனி பிரிவில் மனு கொடுத்தார். அந்த மனுவில் "எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் 2வது மனைவி ராஜம்மாள். அவர்களின் மகள் அமிர்தலட்சுமி - பாஸ்கர் ஆகிய தம்பதியின் மகன் நான். எனக்கு அண்ணன், தம்பி, தங்கை உள்ளனர். நாங்கள் 4 பேரும் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை வளர்த்தார்.
நான் புகைப்பட கலைஞராக பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். தற்போது கொரோனா காலத்தில் தொழில் முடங்கி மிகவும் வறுமையில் வாடுகிறேன். செக்யூரிட்டி வேலை செய்கிறேன். சாப்பிட வழியில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு மற்றும் ரூபாய் 5 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். அதன்படி இன்று தலைமை செயலகத்தில் உதவி தொகை மற்றும் அரசு குடியிருப்புக்கான வீட்டு சாவியை முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார் தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம்.