ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த கவிதா, 1976ம் ஆண்டு ஓ மஞ்சு என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், நட்சத்திர நாயகன், செந்தமிழ் பாட்டு என பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களிலும் நடித்து வருகிறார் .
கடந்த ஆண்டு கொரோனா முதல அலை தொடங்கியதுமே படப்பிடிப்புகள் எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார் கவிதா. இந்த நிலையில் கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரதராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 16ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி மகன் சாய் ரூப் மரணமடைந்தார். கணவர் தசரதராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மகன் இறந்து 15 நாட்களே ஆன நிலையில் நடிகையின் கணவர் இன்று மரணமடைந்தார்.
கொரோனாவுக்கு மகனையும், கணவரையும் பறிகொடுத்த கவிதாவுக்கு திரை உலகினர் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.