ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பெங்களூரை சேர்ந்தவர் கவிதா கவுடா. தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு நீலி, மகராசி உள்பட பல சீரியல்களில் நடித்தார். கன்னடத்தில் ஒளிபரப்பான லட்சுமி பிரம்மா என்ற தொடரின் மூலம் அங்கு பிரபலமான நடிகை ஆனார். ஸ்ரீனிவாசா கல்யாணம், பர்ஸ்ட் லவ் உள்பட பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
கடைசியாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனாட்சியாக நடித்தார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது கன்னடத்தில் குக் வித் கிறுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடன் பல சீரியல்களில் இணைந்து நடித்து வந்த சந்தன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. தற்போது இருவருக்கும் பெங்களூருவில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை கவிதா கவுடா வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.