ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தொலைக்காட்சிகளில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கிய காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் கவிதா சவுத்ரி. தூர்தர்ஷனில் 1989ம் ஆண்டுகளில் இருந்து 1991ம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'உதான்' என்ற தொடரில் போலீஸ் அதிகாரி கல்யாணி சிங் கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர். பல தொடர்களில் நடித்த அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கி அமிர்தசரசில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கவிதா சவுத்ரி இறந்தார். அவருக்கு வயது 67. கவிதா சவுத்ரியின் மரணத்துக்கு பிரபல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.