ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் குணசித்ர வேட்களில் நடித்திருப்பவர் கவிதா. 1976ம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், நட்சத்திர நாயகன், செந்தமிழ் பாட்டு என பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறர். கங்கா, நந்தினி தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை கவிதாவின் வாழ்க்கையில் இது மிகவும் சோகமான காலமாகிவிட்டது. கொரோனா ஊரடங்கு தொடங்கியதுமே படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். என்றாலும், கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகன் சாய் ரூப் மரணமடைந்தார். அவரது கணவர் தசரதராஜ் தீவிர சிகிச்சையில் உள்ளார். மகன் மரணம், கணவர் கவலைக்கிடம் என்கிற நிலையில் சின்னத்திரையுலகினர் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.