டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அந்த படத்தின் வெற்றியை பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், முருகதாஸிற்கு அடுத்த படம் கிடைப்பதிலும் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. பெரிய நடிகர்களை வைத்தே இயக்கி பழக்கப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் தனது நட்பு கூட்டணியில் உள்ள விஜய்யை வைத்து படம் இயக்கும் எண்ணத்துடன், அவரிடம் ஒரு கதையை கூறினார். ஆனால் அந்த கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததால் அதை நிராகரித்து விட்டார்.
இந்தநிலையில் தற்போது அதே கதையை நடிகர் கமலை வைத்து முருகதாஸ் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன. ஒரு காலத்தில் திரையுலகில் மும்மூர்த்திகளாக வலம் வந்தவர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர். இதில் இன்னும் கமலை மட்டும் வைத்து படம் இயக்காமல் உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதேசமயம் தற்போதைய இளம் நடிகர்களில் மும்மூர்த்திகளாக கருதப்படும் விஜய், அஜித், சூர்யா மூவரது படங்களையும் இயக்கிவிட்ட முருகதாஸுக்கு கமல் படத்தையும் இயகிவிட்டால் அவரது மனக்குறையும் தீர்ந்துவிடும்.. அவரது திரையுலக பயணமும் முழுமை அடைந்தது போல் ஆகிவிடும்.. ஆனால் கமல் கைவசம் உள்ள படங்கள் ஏதோ ஒரு விதத்தில் தாமதமாகி வருவதால், கமல்-முருகதாஸ் கூட்டணி ஒர்க் அவுட் ஆகுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.