புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது ஹாலிவுட் படமான 'த கிரே மேன்' படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றார். விரைவில் அவர் அங்கிருந்து இந்தியா திரும்ப உள்ளார்.
வந்ததுமே அடுத்த மாதம் முதல் கார்த்திக் நரேன் இயக்கி வரும் தன்னுடைய 43வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அதற்கடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ள படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இப்படத்தை தெலுங்கு நிறுவனம் ஒன்றுதான் தயாரிக்கிறது.
இதனிடையே, பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சிதாரா என்டர்டெயின்மென்ட் தங்களது தயாரிப்பில் தனுஷை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. தெலுங்கில் 'பிரேமம், ரணரங்கம், ஜெர்ஸி, பீஷ்மா, ரங்தே' உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் இது. தங்களது தயாரிப்பில் தனுஷ் நடிப்பதற்காக அவருக்கு பெரிய தொகை ஒன்றை சம்பளமாகத் தரவும் அந்த நிறுவனம் தயாராக இருக்கிறதாம்.
தெலுங்கிலிருந்து வரும் நிறுவனங்கள் இங்குள்ள தமிழ் நடிகர்களின் சம்பளத்தை உயர்த்தித் தருவதைப் பார்த்து தமிழ்த் தயாரிப்பாளர்கள் எரிச்சலில் இருப்பதாகவும் ஒரு தகவல்.