பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் |
தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் நரேஷ். தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல நடிகர்கள் வைத்துள்ளதைப் போன்று இவரும் விவசாயப் பண்ணை வைத்துள்ளார். கடந்த வருட லாக்டவுனின் போதே விவாசயம் செய்வதில் இறங்கினார். இந்த லாக்டவுனில் மாம்பழம், நாவல்பழம் விற்பதிலும் இறங்கியுள்ளார்.
இது குறித்து அவருடைய டுவிட்டர் பதிவில், “நரேஷ் என்கிற விவசாயி அவரது கையால் பறிக்கப்பட்ட மாம்பழம், நாவல் பழங்கள் ஆகியவற்றை, அவரது ஸ்டுடியோவில் திரைப்படத் துறையினரிடம் கிலோ 50 ரூபாய்க்கு விற்றார். அதன் மூலம் 3600 ரூபாய் சம்பாதித்தார். ஒரு நடிகராக அதிகபட்ச சம்பளம் வாங்கியதை விட இது மகிழ்ச்சியானது. விவசாயம் செய்து உண்மையான மகிழ்ச்சியை உணருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.