ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
சென்னை: அஜித் நடிக்கும், வலிமை படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் அதில் நடித்த சில நடிகர்கள் விலகியுள்ளனர். போனிகபூர் தயாரிப்பில், அஜித் நடிக்கும் வலிமை படத்தை, எச்.வினோத் இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கால், இதன் படப்பிடிப்பு பணி தடைபட்டுள்ளது. இதனிடையே, படத்தில் நடித்த சில சீனியர் நடிகர்கள், கொரோனா பயத்தால் படப்பிடிப்பில் பங்கேற்க தயக்கம் காட்டி உள்ளனர். அதனால், அவர்கள் நடித்த சொற்ப காட்சிகளை நீக்கி விட்டு, புதியவர்களை நடிக்க வைத்து, மீண்டும் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, படத்தின் அப்டேட் உள்ளிட்ட பல விஷயங்கள் தாமதமாகி வரும் வேளையில், நடிகர்கள் விலகலால் படத்தின் வெளியீடு, மேலும் தாமதமாகும் சூழல் உருவாகி உள்ளது.