நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தமிழில் 2018ல் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராஷி கண்ணா.
அதன்பின் 'அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'அரண்மனை 3, துக்ளக் தர்பார்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, கார்த்தி நடிக்கும் 'சர்தார்', படத்திலும், சித்தார்த் நடிக்கும் 'சைத்தான் கா பச்சா' படத்திலும், மேலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
டில்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா 2013ம் ஆண்டு வெளிவந்த 'மெட்ராஸ் கபே' என்ற ஹிந்திப் படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். பின் தெலுங்கில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ராஷி கண்ணாவின் சம்பளம் ஒரு கோடி ரூபாயாம். இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஹீரோயின்களின் கிளப்பில் இணைந்துள்ளார் ராஷி கண்ணா.
தமிழில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் தான் ஒரு கோடிக்கும் அதிகமாக தற்போது சம்பளம் பெறும் நடிகைகள்.