சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து, அப்படியே தெலுங்கு சினிமாவில் நுழைந்து அதிரடி காட்டும் நடிகைகளின் அடுத்த இலக்கு பாலிவுட் சினிமாவாகத்தான் இருக்கும்.. ஆனால் அசின் போன்ற ஒரு சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு சரியாக அமைந்தது. நயன்தாரா போன்ற சில நடிகைகள் பாலிவுட்டே வேண்டாம் என தென்னிந்திய சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் பிரேமம் படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சாய்பல்லவி தற்போது தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் அவருக்கு பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான அழைப்பு தேடிவந்தது.. ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் சாய்பல்லவி. காரணம் தற்போது அவரது கவனம் முழுதும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறதாம்.