என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தமிழ் சினிமாவில் சில படங்கள் முழுமையாக முடிவடைந்து தணிக்கை சான்றிதழ் பெற்றும் பல்வேறு காரணங்களால் வெளிவராமல் முடங்கிப் போய் உள்ளன. கடந்த வருட கொரோனா தொற்றின் போதே அந்தப் படங்களில் சில ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்போது இரண்டாவது அலை காரணமாக, மூடப்பட்ட தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழல் உள்ளது. முன்னணி நடிகர்களின் முக்கிய படங்களை ஓடிடிக்குக் கேட்டால் அவர்கள் சொல்லும் அதிகப்படியான விலையைப் பார்த்து சில ஓடிடி தளங்கள் மிரண்டு ஓடிவிடுகிறார்களாம். அதனால், முடங்கியுள்ள படங்களைத் தேடிப் பிடித்து குறைந்த விலையில் வாங்கி வெளியிட முயற்சித்து வருகிறார்களாம். அதில் சில படங்களை வாங்கியும் விட்டதாகச் சொல்கிறார்கள்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா நடித்த 'நரகாசூரன்' படம் முடிந்து மூன்று வருடங்களாக முடங்கியிருந்தது. இப்படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட வாங்கிவிட்டார்களாம்.
முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள 'பொன்மாணிக்கவேல்' படமும் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியாகாமல் இருந்தது. அப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாம்.
இப்படி முடங்கிப் போயுள்ள மற்ற படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்', விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்', விஷால் நடித்துள்ள 'மதகஜராஜா' (7 வருடங்களாக), வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'பார்ட்டி', சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்', எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'இறவாக்காலம்', ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள 'அண்டாவ காணோம்', என பட்டியல் இன்னும் நீள்கிறது. இந்தப் படங்கள் ஓடிடியில் வெளியாகுமா என அவற்றின் தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும்.
முன்பெல்லாம் தியேட்டர்களில் மட்டும்தான் படங்களை வெளியிட முடியும். தற்போது ஓடிடி தளங்களிலும், டிவி சானல்களிலும் நேரடியாகவே வெளியிடும் வாய்ப்பு உருவாகிவிட்டது. இப்படி வெளியிட ஆசையிருந்தாலும் எதிர்பார்க்கும் விலை கிடைக்காததால் பலர் காத்திருக்கிறார்களாம். இருப்பினும் சிலர் தியேட்டர்களில் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என உறுதியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.