தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
1989ஆம் ஆண்டு வெளியான டார்ஜன் இன் மேன்ஹேட்டன் படத்தில் டார்ஜனாக நடித்தவர் ஜோ லாரா. அதன்பிறகு அமெரிக்கன் சைபாக், ஸ்டீல் வாரியர், ஸ்டீல் ப்ராண்டியர், ஹாலோக்ராம் மேன் உள்பட பல படங்களில் நடித்தார், டார்ஜன் தி எபிக் அட்வென்ச்சர்ஸ் என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். புகழ்பெற்ற பே வாச் தொடரிலும் நடித்தார்.
தற்போது ஜோ லாரா விமான விபத்தில் மரணம் அடைந்துவிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்னெஸ்ஸே விமான நிலையத்திலிருந்து புளோரிடாவுக்குப் சிறிய ரக விமானம் ஒன்றில் பயணித்துள்ளார் ஜோ லாரா. நாஷ்வில் அருகே இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக அதிகாபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் மொத்தம் 7 பேர் பயணம் செய்ததாகவும், அனைவருமே இந்த விபத்தில் இறந்திருக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் நடிகர் ஜோ லாராவின் மனைவி கென் லாராவும் பயணம் செய்துள்ளார். அவரும் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
உடைந்த விமான பாகங்கள் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடி வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்போதைக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் சிலவும், சில மனித உடல் பாகங்களும் கிடைத்துள்ளது. தொடர்ந்து தேடும் பணிகள் நடந்து வருகிறது.