நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. அவ்வப்போது நல்ல பதிவுகளை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். அதன்பின் கொரோனாவை சமாளிக்க சில நல்ல ஆலோசனைகளைச் சொன்னார்.
இன்றும் ஒரு நல்ல ஆலோசனையைச் சொல்லியிருக்கிறார். “இன்றைய பதிவு புத்தகங்கள், புத்தகங்கள், மேலும் புத்தகங்கள் பற்றியது. நான் சிறுமியாக இருந்த போது புத்தகங்களுக்கு இடையில்தான் எனது மூக்கு புதைந்திருக்கும். எனது பெற்றோர்கள் எப்போதாவது ஒரு முறைதான் சினிமாவுக்கு கூட்டிச் செல்வார்கள். எனவே, புத்தகங்களை வாசிப்பது என்பதுதான் உலகத்திற்கு அப்பால் இருப்பதைக் கண்டுபிடிக்கும் வழியாக இருந்தது,” என அவர் வாசித்த சில புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் மொழிமாற்றத்தை இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன். அதை வல்லமை மிக்க 'பொன்னியின் செல்வன்' புத்தகத்திலிருந்து ஆரம்பித்துள்ளேன்.
இங்குள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஐ-பாட்களை மாற்றிவிட்டு கதைப் புத்தகங்களைக் கொடுங்கள். ஒரு குழந்தையின் கற்பனை வளத்தை புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் பண்படுத்த முடியாது. புத்தகங்களைத் தேர்வு செய்வதும், படிப்பதும் ஒரு போதும் தாமதமாகாது.
அடுத்தவர்களின் வாழ்க்கையில் நுழைந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதை விட அதற்குப் பதிலாக புத்தகங்களுக்குள் நம் மூக்கை நுழைத்துக் கொள்வது இந்த உலகத்தையும் சிறப்பாக்கும்,” என்று குறிப்பிட்டுளளார்.