ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தற்போது தமிழில் துக்ளக் தர்பார், அரண்மனை-3, சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் தில்ராஜு தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கும் தேங்க்யூ குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இத்தாலியில் நடத்தி விட்டு சமீபத்தில் தான் இந்தியா திரும்பியுள்ளனர்.
ராஷி கண்ணா கூறுகையில், ‛‛கொரோனா வைரஸ் மீண்டும் பரவிக் கொண்டிருந்த நேரம் தான் தேங்க்யூ படப்பிடிப்பிற்காக இத்தாலிக்கு புறப்பட்டு சென்றோம். முதலில் இத்தாலிக்கு செல்லவே பயந்தேன். என்றாலும் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் செட்டில் இருக்கும்போது இத்தாலி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதை பின்பற்றி படப்பிடிப்பு நடந்தது. சீக்கிரம் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை நடித்தோம். அப்படி நடித்து முடித்து விட்டு இந்தியா திரும்பியிருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.