புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தி பேமிலி மேன்-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டே நாட்களில் 37 மில்லியனுக்கும் அதிகமான பார்வைக் காட்சிகளைப் பெற்றிருக்கிறது. அனைவர் மீதும் தங்களது அன்பையும், மரியாதையையும் வலியுறுத்தும் தயாரிப்பு தரப்பு, இந்த சீரீஸில் அனைத்து தரப்புகளும் சமநிலை சித்தரிப்பை பெறும் என்று வாக்குறுதி அளிக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோ, தி பேமிலி மேன் என்ற அதன் ஒரிஜினல் சீரீஸின் புதிய சீரீஸ் டிரெய்லரை மே 19 அன்று வெளியிட்டிருக்கிறது. 2019ம் ஆண்டில் வெளியான இதன் சீசன் 1-ற்குப் பிறகு உலகெங்கிலும் இரசிகர்கள் இதன் அடுத்த சீசனுக்காக ஆவலோடு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். யூடியூப்-ல் தொடர்ந்து 3 நாட்களாக புதிய சீசனின் டிரெய்லர் #1-ஆக டிரெண்டிங் ஆகும் நிலையில், தி பேமிலி மேனின் புதிய சீசனுக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், அவர்களது அன்பையும், நேசத்தையும் அபரிமிதமாக வெளிப்படுத்தியிருப்பது வெளிப்படையாகும்.
இதற்குள்ளேயே 37 மில்லியன் வியூஸ் என்ற மிகப்பெரிய வரவேற்பை இந்த டிரெய்லர் பெற்றிருக்கிறது. இந்த டிரெய்லருக்கு கிடைத்திருக்கும் மிகப் பிரமாதமான வரவேற்பை பார்க்கும்போது இதன் படைப்பாளிகள், அவர்களது முழு திறனை பயன்படுத்தி சுவாரஸ்யமான தொடராக இதனை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது நிச்சயம். பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்படவுள்ள இந்த சீசன் பார்வையாளர்களை வியப்பிலும், ஆனந்தத்திலும், ஆழ்த்தும் என்பது நிச்சயம். இந்த சீரீஸின் இயக்குநர் இரட்டையர்களான ராஜ் மற்றும் டிகே, இந்த டிரெய்லரின் மாபெரும் வரவேற்பின் பின்னணியில் இத்தொடர் குறித்து மனம் திறந்து உரையாடினர்.
கேள்வி : உலகெங்கிலும் ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிற தி பேமிலி மேன் புதிய சீசன் பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?
ராஜ் & டிகே: எங்களது உளப்பூர்வமான ஈடுபாட்டோடு இந்த சீரீஸை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். 9-பாகங்களாக வெளிவரும் இந்த துப்பறியும் டிராமா சீரீஸை உருவாக்குவதற்காக பல ஆண்டுகள், குறிப்பாக இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது செலவிடப்பட்டிருக்கின்றன. அது குறித்து எமது பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வது எங்களுக்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.
ஒரு துப்பறியும் ஏஜென்சிக்காக பணியாற்றும் உலகத்தரத்திலான ஒரு துப்பறிவாளராகவும், அதே வேளையில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தந்தையாகவும், கணவராகவும் இருப்பதனால் ஶ்ரீகாந்த் திவாரிக்கு (மனோஜ் பாஜ்பாய் நடிப்பில்) ஏற்படும் உள்ளார்ந்த மோதலை இந்த சீசனும் மிக நேர்த்தியாக சித்தரிக்கிறது. ஶ்ரீகாந்த் இப்போது எதிர்கொள்கின்ற சவால்கள் இன்னும் அதிக சிக்கலானவையாக இருக்கின்றன; அவரது திறன்மிக்க, அறிவார்ந்த நடவடிக்கைகளும் இன்னும் முன்னேற்றம் அடைவதை இந்த சீரீஸில் காணமுடியும். இந்தியாவின் மொழி சார்ந்த மற்றும் கலாச்சாரம் சார்ந்த பன்முகத்தன்மையை இந்த சீசன் உண்மையாக பிரதிபலிக்கிறது மற்றும் சித்தரிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். டிஜிட்டல் தளத்தில் சமந்தா அக்கினேனியின் முதல் நுழைவாகவும் இந்த சீரீஸ் திகழ்கிறது. தைரியமும், வீரமும் மிக்க ஒரு இளம் பெண்ணாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
![]() |
தி பேமிலி மேன் புதிய சீசன், பிரத்யேகமாக அமேசான் பிரைம் வீடியோவில் மட்டும் ஒளிபரப்பாகும்.
(SPONSORED)