டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் 'டர்ட்டி பொண்டாட்டி', பார்ட்டி படத்தில் "ஜிஎஸ்டி...", ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து "அப்படிப் பாக்காதடி", வஞ்சகர் உலகம் படத்தில் "கண்ணனின் லீலை" உள்ளிட்ட பல பாடல்களை பாடியிருப்பவர் ஸ்வாகதா.
சமீபத்தில் ஸ்வாதகா இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட "அடியாத்தே" என்ற ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது காயல் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஸ்வாதகா. ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கியுள்ளார்.
சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கருவைக் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது. கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
நடிகை ஆனது பற்றி ஸ்வாதகா கூறியதாவது: நான் நடிக்க வந்ததற்கு காரணமே என் தங்கை தான். அவள் தான் என்னை தொடர்ந்து வற்புறுத்தி ஆர்வத்தை ஏற்படுத்தினாள். நடிப்பு திறமையை வளர்த்துக் கொள்ள என்னை தியேட்டர் ஆர்ட்சில் பயிற்சிக்கு அனுப்பியதும் அவள்தான். காயல் தவிர தெலுங்கு படம் ஒன்றிலும் தற்போது நடித்து வருகிறேன். என்றார்.




