ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
கொரோனா இரண்டாவது அலையின் பரவல் மிகவும் மோசமாக இருக்கிறது. தினமும் சினிமா, டிவி பிரபலங்கள் யாராவது மரணம் அடைகிறார்கள் என்ற தகவலும் வந்து கொண்டுதான் இருக்கிறது. டிவி தொடர்களில், கேம் ஷோக்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் சில டிவிக்களின் தொடர்கள், ஷோக்கள் படப்பிடிப்புகள் ரகசியமாக நடந்து வருவதாகத் தெரிகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சில நடிகர்கள், நடிகைகள் அவர்களது பாதிப்பைப் பற்றி வெளியில் கூட சொல்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. தற்போது டிவி தொடர் ஒன்றில் நடிக்கும் ஒரு முன்னாள் கதாநாயகி நடிகை உள்ளிட்ட சிலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். அப்படி அவர்கள் சொன்னால் தான் அவர்களுடன் கடந்த சில நாட்களில் உடனிருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள இயலும்.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை படப்பிடிப்பு நடத்துபவர்கள் ஒழுங்காகக் கடைபிடிக்காததே டிவி நடிகர்கள், நடிகைகளுக்கு இந்த அளவிற்கு கொரோனா பரவக் காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருந்தால் அவர்களுக்கென தனி இட வசதி கொடுப்பார்கள். ஆனால், சிறிய நடிகர்கள், நடிகைகளுக்கு அப்படிப்பட்ட வசதிகள் கிடைக்காது. அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயால் அவர்களது நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கும்.
இப்படி ரகசியமாக படப்பிடிப்பு நடத்துபவர்களை அறிந்து அவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னத்திரை வட்டாரங்களில் இருந்தே தகவல் வருகிறது.