பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலை ரொம்பவே தீவிரமா இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பது ஒரு பக்கம் சவாலாக இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அவர்களை நோயாளிகளாக அனுமதிப்பதற்கு ஏற்ற படுக்கை வசதிகள் கூட பற்றாக்குறையாக இருக்கின்றன.
இந்தநிலையில் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ராதே ஷ்யாம் படக்குழுவினர் படத்திற்காக பிரமாண்டமான மருத்துவமனை செட் ஒன்றை உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்போது ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு படுக்கை வசதி பற்றாக்குறை நிலவுவதாக கூறியதை அடுத்து, படப்பிடிப்புக்காக உருவாக்கி வைத்திருந்த 50க்கும் குறையாத படுக்கைகள், ஸ்டாண்டுகள், ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்தையும் கொடுத்து உதவியுள்ளது. படக்குழுவின் இந்த பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.