ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஊமை விழிகள், இணைந்த கைகள் உள்பட பல படங்களில் நடித்தவர் அருண் பாண்டியன். பின் தயாரிப்பாளராகவும், படங்களை விநியோகம் செய்யும் விநியோகஸ்தராகவும் வலம் வந்தார். நீண்ட இடைவேளைக்குப்பிறகு தனது மகள் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தார். அப்பா-மகளை மையப்படுத்தி உருவான அந்த படத்தை கோகுல் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் இவர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டதோடு, இதயக் கோளாறு பிரச்னையில் சிக்கி, அதிலிருந்தும் மீண்டு வந்துள்ளார்.
இதுப்பற்றி கீர்த்தி பாண்டியன் சமூகவலைதளத்தில் கூறுகையில், ‛‛சமீபத்தில் என் தந்தைக்கு நெஞ்சுவலிப்பது போன்று இருந்தது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். அப்பாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலியில் உள்ள எங்களது வீட்டில் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவரை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை எடுத்து வந்தோம். ஒருவாரத்திற்கு பின் மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு சோதனை செய்ததில் இதயத்தில் ரத்த குழாய்களில் இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. கோவிட் பாசிட்டிவ் என்பதாலும் அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பதனாலும் கூடுதல் கவனம் எடுத்து ஆஞ்ஜியோ பிளாஸ்ட் சிகிச்சை வழங்கப்பட்டது. இப்போது அப்பா நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.
மேலும் வயதானவர்கள் தங்களது உடலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். கொரோனா பிரச்னை உள்ள காலத்தில் கட்டாயம் மாஸ்க் அணியுங்கள், அடிக்கடி சானிடைஸர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துங்கள், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.




