தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
கொரோனா பரவல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் மக்களுக்கு உதவிடும் வகையில் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
'யுவரத்னா, ருஸ்தம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா மக்களுக்கு உதவுவதற்காக தற்போது ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளார்.
'புரொஜக்ட் ஸ்மைல் டிரஸ்ட்' என்ற அமைப்புடன் இணைந்து அவர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். அது பற்றிய செய்தி வெளிவந்ததும் அவரை வாழ்த்தி பலரும் மெசேஜ் அனுப்பி வருகிறார்கள்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அர்ஜுன் கவுடா, “நான் உரிய பயிற்சி எடுத்தும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். உங்கள் வாழ்த்துகளால் நிறைத்துவிட்டீர்கள். கர்நாடக மக்களுக்கு இப்படி சேவை செய்வதில் நான் பெருமை கொள்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.