புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
திடீரென மாரடைப்பால் இன்று மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக் ஆகியோரது அகால மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது போலவே இவரது மரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் 'கோ' ஒரு முக்கியமான படம். ஒரு பரபரப்பான அரசியல் படமாக பத்து வருடங்களுக்கு முன்பு 2011ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதியன்று இப்படம் வெளியானது. பத்து வருடத்தை நினைவு கூறும் வகையில் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கார்த்திகா நாயர் கடந்த வாரம் 'கோ' படப்பிடிப்புப் புகைப்படங்கள் சிலவற்றைப் பதிவிட்டு நினைவு கூர்ந்திருந்தார்.
அந்தப் புகைப்படங்களில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இல்லை. அதனால், 'நான் எங்கே ?' என கார்த்திகாவின் டுவீட்டில் கமெண்ட் போட்டிருந்தார். அதற்கு கார்த்திகா, “நாம் ஒரு ரியூனியன் நடத்தி நிறைய புகைப்படங்கள் எடுப்போம்” என பதிலளித்திருந்தார்.
இந்த சுவாரசியமான டுவிட்டர் பதிவுகள் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் கே.வி.ஆனந்த் மறைவு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
“இது பொய்யான செய்தி என யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ், இதை நம்ப குழப்பமாக இருக்கிறது,” என கே.வி.ஆனந்த் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கார்த்திகா.
கே.வி.ஆனந்த் இயக்கிய படங்களில் பணியாற்றிய பிரபலங்களுக்கு அவரது மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..