நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கும் படத்தில் நவீன்பொலிஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் அனுஷ்கா. இந்தநிலையில், அவரைப்பற்றி மீண்டும் ஒரு திருமண செய்தி டோலிவுட்டில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.
அதாவது, பாகுபலி படத்தில் நடித்த பிறகு அப்பட நாயகனாக பிரபாசும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதையடுத்து அவர்கள் அதை மறுத்ததோடு இருவருமே நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புளி வைத்தனர்.
அவ்வப்போது அனுஷ்கா அவரை திருமணம் செய்ய போகிறார், இவரை திருமணம் செய்ய போகிறார் என செய்திகள் வரும். பின்னர் அது அப்படியே அமுங்கி போகும். இந்நிலையில் தற்போது துபாயை சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும், திருமணத்திற்கு பிறகு துபாயில் அனுஷ்கா குடியேறி விடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனபோதும் வழக்கம்போல் இந்த செய்தி குறித்தும் அனுஷ்கா எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாக உள்ளார்.