மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மூகமூடி தோல்வி அடைந்ததால் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் போனவர் அங்கு பிசியான நடிகை ஆகிவிட்டார். பாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்.
தற்போது தெலுங்கில் ஆச்யார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படங்களிலும், இந்தியில் சிர்குஸ் என்ற படத்திலும், தமிழில் விஜய்யுடனும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார் பூஜா. தற்போது அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமாக வீட்டுக்குள் இருந்தபடியே தனது குருநாதர் வழிகாட்டுதலில் பிராணாயாமம் செய்து வருகிறார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை தனது டுவிட்ரில் வெளியிட்டுள்ள பூஜா, "பிராணாயாமம் நம் மனதை அமைதிப்படுத்தும், மூச்சுவிடுவதை எளிதாக்கும், கொரோனாவை எதிர்த்து போராட இந்த இரண்டும் முக்கியம். நான் இதனை தினமும் செய்து வருகிறேன். எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டள்ளது. நீங்களும் செய்யுங்கள்" என்று கூறியிருக்கிறார்.