'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! |
கொரோனாவின் இரண்டாவது அலைக்கு திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. என் வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தக்க தருணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் நலமாக உள்ளேன், பயப்பட ஒன்றும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன் தற்போது சுகுமார் இயக்கத்தில் ‛புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.