காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி |
சங்கமம், திருநெல்வேலி, என் புருஷன் குழந்தை மாதிரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விந்தியா. அதிமுக.,வின் கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ளார். தேர்தல் சமயங்களில் அதிமுக., ஆதரவாக பிரச்சாரம் செய்பவர், எதிர்கட்சியினரை குறிப்பாக திமுக.,வை வசை பாடுவார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அதிமுக.,விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் திமுக.,வினர் தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாக குற்றம்சாட்டி உள்ள விந்தியா அதுதொடர்பாக ஒரு அதிரடி டுவீட்டும் போட்டுள்ளார்.
அதில், ‛‛உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு எண்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா'' என பதிவிட்டுள்ளார் விந்தியா.