நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் 'தி கிரே மேன்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கத்தில் ரியான் கோஸ்லிங்க, கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகியோருடன் இப்படத்தில் தனுஷ் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனது குடும்பத்தினருடன் பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவிற்குப் பயணமானார். ஜுன் மாதம் தான் தனுஷ் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. தற்போது கலிபோர்னியாவில் குடும்பத்தினருடன் அவர் நேரத்தைப் போக்கும் வீடியோ ஒன்றும், சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.
தனுஷ் போட்டிங் செய்ய அவர் மனைவியும், மகனும் அதைப் பார்க்கும் வீடியோ காட்சியை அவரது ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.