ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித், வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் காலாவில் ரஜினியின் காதலியாக நடித்த ஹூமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு பட ஹீரோ கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
இந்த வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் மல்லுக்கு நின்றதை அடுத்து மே 1-ந்தேதி பர்ஸ்ட்லுக் வெளியாகும் என அறிவித்த போனிகபூர், அதைத் தொடர்ந்து வலிமை படத்தின் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிவித்து அஜித் ரசிகர்களை அமைதிப்படுத்தினர்.
ஆனபோதிலும் வலிமை படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை திட்டமிட்டபடி ஸ்பெயின் நாட்டிற்கு சென்று படமாக்க முடியாமல் தற்போது படக்குழு தடுமாறிக் கொண்டிருக்கிறது. உலகமெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிக்கொண்டிருப்பதால் ஸ்பெயினுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் அந்த ஆக்சன் காட்சியை ஸ்பெயின் செல்லாமல் இந்தியாவிற்குள்ளேயே படமாக்க வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? என்று வலிமை படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் வலிமை படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.