ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் |

சின்னத்திரை நட்சத்திரங்கள் அவினாசும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடிக்கும் புதிய தொடர் ஆனந்தி. இவர்களுடன் விசித்ரா, நிரோஷா, டாக்டர் கிரி, கரோலின், துர்கா ஆகியோரும் நடிக்கிறார்கள். பத்மாவதியின் கதையை சாய்மருது இயக்குகிறார்.
ஆனந்தி (ஐஸ்வர்யா)மற்றும் வருணின் (அவினாஷ்) ஆகியோரின் முழுமையான காதல் கதை. தந்தை இல்லாத குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய ஆனந்தி, வருணைக் காதலிக்கிறாள். இரு குடும்பங்களிலும் நிலவும் பிரச்சினைகளைத் தாண்டி, இருவரின் காதலும் வெற்றி பெற பல தடைகள் உள்ளன. அனைத்து தடைகளையும் உடைத்து காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை.
குடும்ப செண்டிமென்ட் நிறைந்த இளமை ததும்பும் காதல் கதை. கடந்த திங்கள் முதல் (ஏப்ரல் 19) ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.