புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கனி வென்று ஐந்து லட்ச ரூபாய் பரிசையும் தட்டிச் சென்றார். இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ, அறிவு, பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளர் முகேன் ராவ் ஆகியோர் நேரடியாகவும், ஏஆர் ரகுமான் வீடியோ கால் மூலமாகவும் கலந்து கொண்டனர்.
கடைசியாக நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கனிக்கும் மற்ற போட்டியாளர்கள், கோமாளிகள் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் சிம்பு. தன்னுடைய 'காரக்குழம்பு' ரெசிபி மூலம் நிகழ்ச்சியில் பேசப்பட்டவர் கனி. போட்டியில் வென்ற கனியை மீண்டும் அவருடைய வீட்டுக்குச் சென்று பாராட்டினார் சிம்பு.
'காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகள் தான் கனி. 'தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி' ஆகிய படங்களை இயக்கிய திருவைக் காதலித்து திருமணம் புரிந்தவர்.
சிம்பு அவருடைய நண்பர் நடிகர் மகத், தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோருடன் கனி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிம்பு வந்ததைப் பற்றி, “மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளில்லை, நிரம்ப நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் இயக்குனர் திரு டுவிட்டரில், ‛‛இன்ப அதிர்ச்சியாக எங்கள் வீட்டிற்கு வந்த சகோதரர் சிம்பு, மகத், ரக்ஷன், சயத்திற்கு நன்றி. கனி வைத்த காரக்குழம்பு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.