இந்திரா சவுந்தர்ராஜனின் நிறைவேறாத சினிமா கனவு | பிளாஷ்பேக்: பயோபிக் படங்களில் மட்டுமே நடித்தவர் | 'அமரன்' தாறுமாறு ஓட்டம் :'கங்குவா' படத்திற்கு புதிய சிக்கல்? | கார் விபத்திலிருந்து உயிர் தப்பிய ஜீவிதா | உலக நாயகன்னு அழைக்காதீங்க...: அஜித் பாணியில் கமல் எடுத்த முடிவு | 'அமரன்' வசூல் ரூ.250 கோடியைக் கடக்கும்! - பாக்ஸ் ஆபீஸ் தகவல் | 'கேம் சேஞ்சர்' டீசர் - மூன்று மொழிகளிலும் சேர்த்து சாதனை | புஷ்பா 2 படத்தில் இணைந்த ஸ்ரீ லீலா! | இரண்டாவது முறையாக இணையும் சிறுத்தை கூட்டணி! | புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு 7 நகரங்களுக்கு செல்லும் படக்குழு! |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். தமிழில் மட்டுமே அதிகப் படங்களை இயக்கியுள்ளார். அவருக்கும் பான்-இந்தியா அளவில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
தமிழில் தற்போது அவர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படம் அப்படியே நின்றிருந்தாலும், அதைத் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தியில் அடுத்தடுத்து படங்களை இயக்கப் போய்விட்டார்.
அவர் தமிழில் இயக்கிய 'அந்நியன்' படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க ரீமேக் செய்ய உள்ளார். அப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தமிழில் அப்படத்தைத் தயாரித்த ஆஸ்கர் நிறுவனம் படத்தின் கதை உரிமை தங்கள் வசம்தான் இருக்கிறது, ஷங்கர் அதே கதையை ஹிந்தியில் ரீமேக் செய்யக் கூடாது என்றது. ஆனால், கதையை எழுதியது தான்தான் உரிமை தன்னிடமே உள்ளது என தயாரிப்பு நிறுவனத்திற்கு ஷங்கர் பதிலளித்தார்.
அது பற்றிய சர்ச்சை இன்னும் தொடர்ந்தாலும் 'அந்நியன்' ஹிந்தி பட ரீமேக் வேலைகளை ஷங்கர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறாராம். தற்போது படத்தின் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானியுடன் பேசி வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2022ம் ஆண்டில்தான் இந்தப் படம் தொடர்பான வேலைகள் ஆரம்பமாக உள்ளது என்றாலும் அடுத்து ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஹிந்திப் பட ஆரம்பக் கட்ட வேலைகளை முடித்துவிட ஷங்கர் தீர்மானித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.