கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மறைந்த நடிகர் விவேக்கிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : நடிகர் விவேக்கின் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் காலையில் இருந்து இப்போது வரை அந்த துக்கத்திலேயே என் மனது அழிந்துவிட்டது. காரணம் நடிகர் விவேக் என் மீது மிகுந்த மரியாதையும், அளவற்ற அன்பும், அபிமானமும் வைத்திருந்த ஒரு நபர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே அவர் எனது ரசிகராக இருந்துள்ளார். பின்னால் அபிமானியாக மாறி, பின்னாளில் பக்தராக மாறக்கூடிய அளவுக்கு என்னை நேசித்துள்ளார். சமீபத்தில் கூட என்னை வந்து பார்த்துவிட்டு சென்றார். அவர் என்னென்ன பண்றார் என்பதை என்னிடம் சொல்வார். நானும் அவரை ஊக்கப்படுத்தி அவருக்கு உறுதுணையாக இருந்தேன். எனக்கு தெரிந்த யுக்திகளை கூறுவேன்.
சமீபத்தில் கூட என்னை ஸ்டுடியோவில் வந்து பார்த்துவிட்டு சில வேலைகளுக்காக என்னிடம் அனுமதி வாங்கி சென்றார். அவரின் அன்பையும், அபிமானத்தையும் இன்னொரு ரசிகனிடம் நான் பார்க்க முடியுமா என தெரியவில்லை. எல்லோரும் அவரின் மறைவில் துக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் துக்கத்தில் நான் பங்கெடுக்க முடியாது. அதேப்போன்று என் துக்கத்தில் நீங்கள் பங்கெடுக்க முடியாது. அவரவர் துக்கம் அவரவருக்கு தான். நடிகர் விவேக்கின் குடும்பமே என் மீது பாசம் வைத்திருந்தது. அவரின் மறைவு எல்லோருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியது போன்று அவரது குடும்பத்தினருக்கும் அளவற்ற துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த துக்கத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும் என்றும், விவேக்கின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன். விவேக்கின் குடும்பத்திற்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.