கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி |
தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட். தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா பிரச்னை துவங்கியபோது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு பஸ், ரயில், ஏன் விமானங்களில் கூட அனுப்பி வைத்தார். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு உதவி செய்து வந்தார். சிலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். விவசாய செய்ய ஒரு குடும்பத்திற்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். நிறைய பேருக்கு படிக்க செல்போன் வாங்கி தந்தார். இப்படி ஏராளமான உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இப்போது நடிகர் சோனு சூட்டும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுப்பற்றி டுவிட்டரில் அவர் கூறுகையில், "கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் எனது மன நிலை அதை விட உறுதியாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுவிட்டேன். கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. உங்களுக்காக நான் என்றும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள்" என பதிவிட்டுள்ளார் சோனு சூட்.