ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? |
மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன்ராஜா இயக்க, சிரஞ்சீவி நடிக்கிறார். தற்போது ஆச்சார்யா படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வரும் சிரஞ்சீவி அப்படத்தை முடித்ததும் லூசிபர் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருந்தார். மோகன்ராஜாவும் பிரீபுரொடக்சன்ஸ் பணிகளில் தீவிரமடைந்திருந்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா இரண்டாவது அலை பரவிக்கொண்டிருப்பதால் இப்போது லூசிபர் படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டனர். மேலும், இந்த படத்தில் நடிக்க முன்பு நயன்தாராவை அணுகியபோது கால்சீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. ஆனால் இப்போது லூசிபர் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தள்ளிப்போவதால், மீண்டும் நயன்தாராவை மோகன்ராஜா அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மோகன் ராஜா ஏற்கனவே தனது தனி ஒருவன், வேலைக்காரன் படங்களில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.