ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும், தனது தந்தை மம்முட்டியை போலவே தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். அதற்கேற்றபடி கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது தமிழில் 'ஹே சினாமிகா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்,. இந்தப்படத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். காஜல் அகர்வால், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் துல்கர் சல்மான். மலையாளத்தில் ஏற்கனவே பல படங்களில் அவர் பாடியிருந்தாலும், தமிழில் இதுதான் அவர் பாடும் முதல் பாடல். மதன் கார்க்கி இந்த பாடலை எழுத, '96' புகழ் கோவிந்த் வசந்தா இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழில் பாடியது குறித்து துல்கர் சல்மான் கூறும்போது, “இதுபோன்ற பாடல் கிடைத்தற்கு நான் உண்மையிலேயே புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.