பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஒரு வருடத்திற்கு முன்பு நாம் எப்படியான ஒரு மனநிலையில் இருந்தோமோ அதே போன்றதொரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் தற்போது அதிகமாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றிற்குப் பிறகு மற்ற தொழில்கள் ஓரளவிற்கு சமாளித்துக் கொண்டாலும், சினிமா துறை மட்டுமே மீண்டும் மீண்டு வராமல் தடுமாறிக் கொண்டிருந்தது.
தற்போது மீண்டும் ஒரு தள்ளாட்டத்திற்கு வந்துவிட்டது. நாளை மறுநாள் ஏப்ரல் 10ம் தேதி முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் புதிய அரசு பதவி ஏற்றால் இந்த உத்தரவில் மாற்றம் வருமா என்பதும் தெரியாது. அதற்குள் கொரோனா கட்டுப்படுத்தப்படுமா என்பதும் தெரியாது. கடந்த வருடத்தைப் போலவே சில பல மாதங்கள் நீடித்தால் அது சினிமா தொழிலுக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
50 சதவீத இருக்கைகள் தான் என்பதால் சிறிய படங்களின் வெளியீடும், அதற்கான வசூலும் பாதிக்கப்படலாம். முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே ஓரளவிற்கு சமாளிக்கும். அதன் காரணமாக மீண்டும் ஓடிடி தளங்களில் புதிய படங்களின் வெளியீடு வருமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட யோகிபாபு நடித்த புதிய படமான 'மண்டேலா' நேரடி டிவி வெளியீடு, அடுத்த நாளே ஓடிடி வெளியீடு என போட்ட முதலீட்டைத் திரும்ப எடுத்துக் கொண்டது.
அது போல தங்கள் முதலீட்டையும் எடுக்க வேண்டும் என நினைக்கும் தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் திரும்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.