ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தலைவி. விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் மதன் கார்க்கி எழுதிய மழை...மழை... என்ற வீடியோ பாடலை இன்று வெளியிட்டனர்.
இப்பாடல் ஒரு கிளாமர் பாடலாக இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. ஹிந்தி டிரைலரில்தான் இப்பாடலின் சில காட்சி வந்தது. கிளாமர் பாடலாக இருப்பதால் தமிழில் இப்பாடல் இடம் பெறாது என்று சொன்னார்கள். ஆனால், இப்போது தமிழிலும் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.
பாடலையும் ஹிந்தியில் மட்டும்தான் படமாக்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது. பாடலுக்கு நடனமாடியுள்ள ஜெயலலிதா வேடத்தில் நடித்த கங்கனாவின் உதட்டசைவிற்கும் பாடலுக்கும் துளி கூட பொருத்தமாக இல்லை. தமிழில் எடுக்கப்படாத ஒரு பாடலை அப்படி சேர்க்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.
இப்பாடலை மூன்று மொழிகளில் சமந்தா ரிலீஸ் செய்துள்ளார். ஜெயலலிதாவின் முதல் படமான “வெண்ணிற ஆடை 1965” படத்திலிருந்து துவங்கும் இப்பாடல், அவரது மறக்க முடியாத படங்களின், நடிப்பு துணுக்குகளை, கங்கனா ரனாவத்தின் நடிப்பில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.