துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‛தலைவி' என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார் இயக்குனர் விஜய். ஜெ., வேடத்தில் கங்கனாவும், எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியாகி டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால வாழ்வின் தடங்களை ஒரு நடிகையாக, அரசியலில் அவர் உச்சம் தொட்டது, அதன் பின்னணியில் அவர் சந்தித்த போராட்டங்களை சொல்லும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலருக்கு தமிழை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் 3.03 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் சினிமாவில் ஜெயலலிதா உச்ச நட்சத்திரமாக மாறியது, எம்.ஜி.ஆர்., அவரை அரசியலுக்கு அழைத்து, அவரையே அரசியல் வாரிசாக கொண்டு வர நினைத்தது, அதற்கு பின்னால் அவர் சந்தித்த அரசியல் போராட்டங்கள் அனைத்தையும் பேசும்படி காட்சிகள் உள்ளன.
டிரைலரிலேயே ஜெயலலிதாவாக கங்கனா மிரட்டி உள்ளார். குறிப்பாக டிரைலரில் வரும், ‛‛மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் ஜெயா, நீ மக்களை விரும்பினால் மக்கள் உன்னை விரும்புவார்கள் அது தான் அரசியல், என்னை அம்மாவாக பார்த்தீர்கள் என்றால் என் இதயத்தில் இடமிருக்கும், என்னை வெறும் பொம்பளையா பார்த்தீங்கனா...'' போன்ற வசனங்கள் பட்டையை கிளப்பி உள்ளன. அதோடு சட்டசபை வளாகத்தில் ஜெயலலிதாவை மிகவும் கீழ்த்தரமாக நடத்திய காட்சிகள், எம்ஜிஆர்., இறந்த சமயத்தில் அவரை கீழே தள்ளிய காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம் தமிழ் டிரைலரில் இடம்பெறாத சில காட்சிகள் ஹிந்தி டிரைலரில் இடம் பெற்றுள்ளன. அவை இதில் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தும். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இந்தப் படத்தின் டிரைலர் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.