மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை |
நேற்றைய தினம் 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் இனிமேல் தான் ரிலீஸாக இருக்கிறது. இந்த விருது அறிவிப்பினால் மற்ற யாரையும் விட இந்தப்படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் தான் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
காரணம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு என மேலும் இரண்டு விருதுகள் இந்தப்படத்திற்கு கிடைத்துள்ளன. இதில் இந்தப்படத்திற்கான விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை செய்திருப்பவர் சாட்சாத் பிரியதர்ஷனின் மகன் சித்தார்த் தான். ஆம்.. அமெரிக்கா சென்று விஎப்எக்ஸ் படிப்பை முடித்துவிட்டு வந்த சித்தார்த், நேரடியாக தனது தந்தை இயக்கி வந்த 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் விஎஃப்எஸ் சூப்பர்வைசராக பணியாற்றினார். முதல்படமே வரலாற்று நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் என்பதால் மிகவும் நேர்த்தியாக தனது வேலையை செய்துள்ளார் சித்தார்த்
கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருதுகள் பட்டியலில் இந்தப்படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்காக சித்தார்த்துக்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது பணிக்கு மேலும் கௌரவம் செய்யும் விதமாக, தற்போது தேசிய விருதும் கிடைத்துள்ளது. இதனால் தனது மகன் குறித்து பெருமிதமும் சந்தோஷமும் அடைந்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் அவரது மகள் கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.